ETV Bharat / state

ஈரோடு மல்லிகார்ஜூனா கோயில் தெப்ப திருவிழா கோலாகலம் - Theppa Festival

ஈரோடு திகனாரை ரங்கசாமி மல்லிகார்ஜூனா கோயில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

ஈரோடு மல்லிகார்ஜூனா கோயில் தெப்ப திருவிழா கோலாகலம்

author img

By

Published : Oct 7, 2022, 12:56 PM IST

ஈரோடு : தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா இன்றி இயல்புநிலை திரும்பியுள்ளதால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கணபதி பூஜையுடன் தெப்ப திருவிழா மீண்டும் தொடங்கியது.

கோயிலில் உள்ள ரங்கசாமி, மல்லிகார்ஜுனா சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்துடன் உற்சவ சிலைகள், சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது சாமிக்கு புனிதநீர் ஊற்றி மேள தாளத்துடன் பக்தர்கள் வழிபட்டனர்.

ஈரோடு மல்லிகார்ஜூனா கோயில் தெப்ப திருவிழா கோலாகலம்

இதனைத்தொடர்ந்து சப்பரம் தெப்ப திருவிழாவுக்காக கோயில் குளத்தை அடைந்தது. அங்கு பக்தர்கள் 10,000 தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து குளத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து சப்பரத்துடன் வடிவமைக்கப்பட்ட தேரில் சாமி குளத்தை மூன்று முறை சுற்றி வந்தது.

அப்போது தெப்பக் குளத்தில் எழுந்தருளிய ரங்கசாமி மற்றும் மல்லிகார்ஜூனா சாமியை பக்தர்கள் வழிபட்டனர். மேலும் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், ஊர்மக்கள் நோயின்றி வாழவும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், குளத்தில் இருந்து சாமி மீண்டும் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிகழ்வின்போது தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்டகாஜனூர் மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சாமியை யார் தூக்குவது...?; இருதரப்பினர் வாக்குவாதத்தால் கோயில் திருவிழாவிற்கு விதிக்கப்பட்ட தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.