ETV Bharat / state

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர்கள் கைது - lottery ticket seller arrest

ஈரோடு: சத்தியமங்கலம் நகர் பகுதியில் தடை செய்யபட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

author img

By

Published : Feb 21, 2021, 11:38 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, சத்தியமங்கலம் காவல் துறையினர் வடக்கு பேட்டை, சத்யா தியேட்டர் ரோடு, திப்பு சுல்தான் ரோடு, அத்தாணி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 6 நபர்களை பிடித்தனர்.

இதுகுறித்து அவர்களை விசாரணை செய்தபோது கோவை சூலூரை சேர்ந்த செல்வன், சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சச்சிதானந்தம், சத்தியமங்கலத்தை சேர்ந்த அருண், அஜ்மல், நூர் முகமது, விருதுநகர் மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த கவுதம் என்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து 25,400 ரூபாயும், லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பேர் மீதும் சத்திய மங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபிசெட்டிப்பாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இதயும் படிங்க:போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரித்து பண மோசடி - 4 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.