ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் ஒன்றியக் குழு தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் ரேணுகாதேவி தூக்கநாயக்கன்பாளையத்தில் வாக்குப்பதிவு ஆரம்பித்தார். இங்கு மொத்தம் உள்ள 10 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் திமுக கூட்டணி 7 பேரும், அதிமுக 3 பேரும் உள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பிப்பதற்கு முன்பே அதிமுகவின் ஒன்றாவது வார்டு உறுப்பினர் நடராஜ், திடீரென்று வாக்குப் பெட்டியை தூக்கிச்கொண்டு ஓட முயற்சித்தார். உடனடியாக அங்கிருநத் மக்களும், காவலர்களும் அவரை தடுத்து நிறுத்தி பெட்டியை காப்பாற்றினர்.
இதை பார்த்த திமுக உறுப்பினர் ஏழு நபர்களும், திடீரென்று ஒன்றிய அலுவலகத்தின் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆதாரமாக வைத்து தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலர் ரேணுகாதேவி தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார்.
இதையும படிங்க: பாரம்பரிய கலைகளை பறைசாற்றும் ’வீதி விருது விழா’ சென்னையில் தொடக்கம்