ஈரோடு அருகேயுள்ள ராசாம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சுதாகர். தறிப்பட்டறைத் தொழிலாளியான இவருக்கும் லட்சுமி என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார் என்பதும், கணவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதால் மனைவி விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்தார் என்பதும் காவல்துறையினர் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதனிடையே காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட தீவிர விசாரணையில், சுதாகர்தான் திருமணம் செய்து கொண்ட மனைவியை விட்டு தனியாக வாழ்ந்து வந்தவர். இதேபோல் லட்சுமியும் திருமணம் செய்து கொண்ட தனது கணவர் மீது கோபித்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வந்தவர், இருவரும் தறிப்பட்டறையில் பணியாற்றி வந்தபோது பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதனிடையே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றுள்ளது. இதனிடையே நேற்றிரவு இருவருக்குமிடையே அவரவர் குடும்பம் குறித்து கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமி, வீட்டிலிருந்த பெட்ரோலை சுதாகர் மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
தீயில் கொழுந்து விட்டு எரிந்து கருகியதற்குப் பிறகு தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்று நினைத்து அவரும் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். காவல்துறையினரின் விசாரணையில் கூட வாழ்ந்து வந்தவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த பெண் தன்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தற்கொலைக்கு முயற்சித்ததால் கொலை வழக்கு, தற்கொலைக்கு முயற்சித்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாடிப்படி அமைக்க பள்ளம் தோண்டிய இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு