ETV Bharat / state

மாமனார் டார்ச்சர்; இளம்பெண் போலீசில் புகார்

ஈரோடு: தொடர் பாலியல் தொல்லை கொடுக்கும் மாமனார் மீது நடவடிக்கை எடுக்ககோரி இளம்பெண் ஒருவர்  ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாமனார் டார்ச்சர்; இளம்பெண் போலீசில் புகார்
author img

By

Published : May 11, 2019, 6:36 PM IST

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வ.உ. சிதம்பரனார் வீதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் சங்கீதாவுக்கும், சென்னிமலை சரவணா நகரைச் சேர்ந்த பழனிச்சாமியின் மகன் அருண் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. திருமணமான நாளில் இருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாட்டால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், அருண் சரிவர வீட்டிற்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயன்ற அருணின் தந்தை பழனிசாமி, வீட்டில் தனியாக இருக்கும் மருமகள் சங்கீதாவிற்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவர் அருணிடம், சங்கீதா பலமுறை கூறியும் கண்டு கொள்ளாமல், உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று அருண் கூறி வந்துள்ளார். இதனால் மாமனாரின் பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. இதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல், மாமனார் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனது கணவருடன் சேர்த்து வைக்ககோரியும் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சங்கீதா தனது குடும்பத்தினருடன் வந்து புகார் அளித்துள்ளார்.

மாமனார் பாலியல் தொல்லை

ஈரோடு 11.05.19                                                   சதாசிவம்                                 
தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வரும் மாமனார் மீது நடவடிக்கை எடுக்க கோரி  இளம்பெண் ஒருவர்  ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.                                                                
                                   
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வ. உ .சி வீதியை சேர்ந்தவர் ராமசாமி.இவரது மகள்  சங்கீதாவுக்கு கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் சென்னிமலை சரவணா நகரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகனான அருணுடன் திருமணம்  நடந்துள்ளது..இந்த நிலையில் திருமணம் ஆனது முதலே  மனைவியுடன் ஏற்பட்ட  கருத்து வேறுபாட்டால் அருண் சரிவர வீட்டிற்கு வராமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தம்பதியினருக்கு ஏற்பட்ட கருத்து மோதலை பயன்படுத்தி மாமனாரான பழனிச்சாமி,மருமகள் சங்கீதாவிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்...இது தொடர்பாக தனது கணவர்  அருணிடம்   சங்கீதா கூறிய போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததோடு,சங்கீதாவுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என அருண் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சங்கீதா இன்று ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தனது குடும்பத்தினருடன் வந்து மாமனார் பழனிச்சாமி பாலியல் பலாத்காரத்திற்கு தன்னை   உட்படுத்துவதாகவும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரியும் புகார்  அளித்தார். 

பேட்டி : 1. லோகநாதன்- பாதிக்கப்பட்ட பெணின் சகோதரர்..
Visual send mojo app
File name:TN_ERD_03_11_LADY_COMPLAINT_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.