ETV Bharat / state

தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு லாரி! - போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு: அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக சர்க்கரை மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையின் குறுக்கே தலைகுப்புற கவிழ்ந்ததால் அப்பகுதியில், தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தலைகுப்புற கவிழ்ந்த லாரி
author img

By

Published : May 29, 2019, 12:28 PM IST

கர்நாடக மாநிலம் மாண்டியாவிலிருந்து சர்க்கரை மூட்டைகளை ஏற்றிய லாரி ஈரோடு நோக்கி வந்துகொண்டிருந்தது. லாரியை ஓட்டுநர் ரவிக்குமார் என்பவர் இயக்கி வந்துள்ளார். அவருடன் உதவியாளர் முஜீப்பும் வந்துள்ளார். லாரி அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக வரட்டுப்பள்ளம் அணை அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் குறுக்கே தலைகுப்புற கவிழ்ந்தது. விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் ரவிக்குமாரும் உதவியாளர் முஜீப்பும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான லாரி

இந்த விபத்தால் ஈரோடு மாவட்டத்திலிருந்து பர்கூர் மலை வழியாக கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பர்கூர் மலைப் பாதையில் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதால் கனரக வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு 29.05.19
சதாசிவம்                                                                   
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக சர்க்கரை பாரம் ஏற்றி சென்ற லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்ததால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது...                                                                   
                                                  
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து  சர்க்கரை பாரம் ஏற்றிய லாரி ஈரோடு நோக்கி வந்துள்ளது.  லாரியை ரவிக்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.அவருடன் உதவியாளர் முஜீப்பும் வந்துள்ளார்.
லாரி அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக வரட்டுப்பள்ளம் அணை  அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற சாலையின் குறுக்கே கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த ரவிக்குமார் மற்றும் முஜிப் இருவரும்  சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இந்த விபத்தால் ஈரோடு மாவட்டத்திலிருந்து பர்கூர் மலை  வழியாக கர்நாடகா மாநிலம் செல்லும்  போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
 போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஈரோட்டில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து வாகனங்களும் வரட்டுப்பள்ளம் சோதனை சாவடியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.. அதேபோல் கர்நாடக மாநிலத்திலிருந்து அந்தியூர் நோக்கி வரும் வாகனங்கள்  பர்கூர், தாமரைகரையில் நிறுத்தப்பட்டுள்ளது.
பர்கூர் மலை பாதையில் தொடர்ந்து இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதால் கனரக வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. 

Visual send ftp..
File name:TN_ERD_01_29_HILL'S_TRAFFIC_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.