ஈரோடு: அரசு தலைமை மருத்துவமனையில் குவாலிடி பிராப்பர்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (QBMS) என்ற நிறுவனத்தின் கீழ் 132 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
தூய்மை பணி, காவல் பணி, நோயாளிகளை அழைத்து செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபடும் இவர்களுக்கு, அரசு அறிவித்த ஊதியம் நாள் ஒன்றுக்கு 707 ரூபாய் வீதம் மாதம் 21 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் ஒப்பந்த நிறுவனம் 8400 ரூபாய் மட்டுமே வழங்குவதாக புகார் கூறுகின்றனர்.
தொழிலாளர் நலத்துறை அலுவலர் முன் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை அடிப்படையில், உரிய ஊதியம் வழங்க கோரி ஒப்பந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து இரண்டாவது நாளாக அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக நோயாளிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
இதையும் படிங்க: அண்ணியை கண்டித்த தம்பி கொலை: ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை