ETV Bharat / state

குப்பைக் கிடங்கில் தீ விபத்து - பொதுமக்கள் அவதி - Erode Fire accident

ஈரோடு : குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Erode Garbage depot fire accident
Erode Garbage depot fire accident
author img

By

Published : Aug 23, 2020, 4:49 PM IST

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெண்டிபாளையம் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் குப்பைக் கிடங்கில் நேற்று (ஆகஸ்ட் 22) நள்ளிரவு முதல் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தீயை அணைக்கும் பணியில், மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையில் 3-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

இந்த தீ விபத்து காரணமாக, வெண்டிபாளையம் பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால், காற்று அடிக்கும் திசையில் தீப்பற்றி எரிந்து வருகிறது.

இதனால் தீயை அணைக்கும் பணியின் நேரம் அதிகமாகி வருவதாக தீயணைப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.