ETV Bharat / state

போலி வீடியோக்களை நம்ப வேண்டாம்: வனத்துறை வேண்டுகோள்

author img

By

Published : Feb 5, 2020, 11:38 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே கால்நடைகளை வேட்டையாடிவரும் சிறுத்தையை பிடிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தியும் கூண்டு வைத்தும் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வனத்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள்
வனத்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பெரியகொடிவேரி, தாசப்பகவுண்டன்புதூர், கொங்கர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக விவசாய தோட்டங்களில் புகுந்த சிறுத்தை ஒன்று அங்குள்ள ஆடு, கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடிவருகிறது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தூக்கநாயக்கன்பாளையம் வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் பொருத்தியும் தாச்சப்பகவுண்டன்புதூர், கொங்கர்பாளையம், கொலிஞ்சிக்காடு ஆகிய பகுதிகளில் கூண்டு வைத்தும் இரவு பகலாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

சிறுத்தையை கரும்பு தோட்டம், வாழைத்தோட்டங்களில் நேரில் பார்த்ததாக விவசாயிகள் தெரிவித்து வருவதையடுத்து, மாலை ஆறு மணிக்குமேல் விவசாயிகள், பொதுமக்கள், குழந்தைகள் ஆகியோர் வீட்டுக்கு வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள வீட்டின் ஜன்னலில் சிறுத்தை ஒன்று எட்டிப்பார்த்து கம்பியை கடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் இந்த வீடியோ அப்பகுதியில் எடுக்கப்பட்டது இல்லை. அதுபோல் இங்கு ஏதும் நடக்கவில்லை. ஆகவே, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டார்.

கால்நடைகளை தாக்கிவரும் சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: முக்கடல் அணைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - பொதுமக்கள் பீதி.!

Intro:tn_erd_10_sathy_leopard_movement_photo_tn10009
Body:போலி வீடியோக்களை நம்ப வேண்டாம்: வனத்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியகொடிவேரி தாசப்பகவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கால்நடைகளை வேட்டையாடிவரும் சிறுத்தையை பிடிக்க தூக்கநாயக்கன்பாளையம் வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் பொருத்தியும் கூண்டு வைத்தும் தொடர்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடுமாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பெரியகொடிவேரி தாசப்பகவுண்டன்புதூர் கொங்கர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக விவசாய தோட்டங்களில் புகுந்து சிறுத்தை ஒன்று ஆடு கன்றுக்குட்டி உள்ளிட்ட கால்நடை வேட்டையாடிவருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தூக்கநாயக்கன்பாளையம் வனத்துறையினர் தானியங்கி கேமராக்களை பொருத்தியும் தாச்சப்பகவுண்டன்புதூர் மற்றும் கொங்கர்பாளையம் கொலிஞ்சிக்காடு ஆகிய பகுதிகளில் கூண்டு வைத்தும் இரவு பகலாக வனத்துறை அலுவலர்கள் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சிறுத்தையை கரும்பு தோட்டம் மற்றும் வாழைத்தோட்டங்களில் நேரில் பார்த்ததாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் மாலை ஆறு மணிக்கு மேல் விவசாய தோடங்களில் உள்ளவர்கள் அதிகம் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் விவசாய தோட்டங்களில் குடியிருக்கும் பொதுமக்கள் மாலை ஆறு மணிக்கு மேல் குழந்தைகளை வெளியில் விளையாட விடவேண்டாம் என்றும் குழந்தைகளை பெற்றோர்களின் பார்வையில் படும் படி கண்காணிக்கவேண்டும் என்றும் பகல் நேரங்களில் விவசாய பணியில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் விவசாயக்கூலித்தொழிலாளர்கள் இரண்டுக்கும் மேற்பட்டவர்களுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் ஒரு வீட்டின் ஜன்னலில் சிறுத்தை ஒன்று எட்டிப்பார்த்து கம்பியை கடிக்கும் வீடியோ ஒன்று அப்பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இதனால் பெரியகொடியில் உள்ள ஒரு வீட்டினுள் சிறுத்தை நேற்று இரவு புகுந்துள்ளதாகக்கூறி அந்த வீடியோவை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்த்து மிகவும் அச்சமடைந்துள்ளதுடன் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த வீடியோ இப்பகுதியில் எடுக்கப்பட்டது இல்லை என்றும் அதுபோல் இப்பகுதியில் ஏதும் நடக்கவில்லை எனவும் அது ஒரு போலி வீடியோ அதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைய வேண்டாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கால்நடைகளை தாக்கிவரும் சிறுத்தையால் மிகவும் பயப்படவேண்டியுள்ளதாகவும் சிறுத்தையின் நடமாட்டதை கண்காணித்து விரைந்து பிடிக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

Conclusion:வனத்துறை எச்சரிக்கை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.