ETV Bharat / state

டெல்லி செல்கிறார் முதலமைச்சர்! - நிதி பிரச்சனைகள் குறித்து பிரதமரை சந்திக்க திட்டம் - CM Visit to Delhi

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டம் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பிரதமருடன் விவாதிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அவருடன் அதிகாரிகள் மற்றும் எம்பிக்கள் உடன் செல்ல உள்ளனர்.

PM Modi And MK Stalin
PM Modi And MK Stalin (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து பிரதமருடன் விவாதிக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அவருடன் அதிகாரிகள் மற்றும் எம்பிககள் உடன் செல்ல உள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த மாதம் 27 ஆம் தேதி அமெரிக்கா சென்றார். அங்குள்ள பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 14 ஆம் தேதி சென்னை திரும்பினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் அமெரிக்க பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், இந்த பயணத்தின் மூலம் ரூ.7,618 கோடிக்கு 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகவும், இதன்மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார். புதிய கல்வி கொள்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், அமைச்சர்களும் சந்தித்து வந்துள்ளனர். இதுகுறித்து பிரதமரிடம் உடனடியாக நேரம் கேட்டு அதுகுறித்து வலியுறுத்த இருக்கிறேன். தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி குறித்து விவாதிக்க பிரதமரை விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டுக்கு எஸ்எஸ்ஏ (Samagra Shiksha Scheme) திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தாமதம் செய்கிறது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) வலுக்கட்டாயமாக ஏற்க வைக்கும் முயற்சியாகவும், தலைவணங்க மறுத்ததற்காகவும் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை பாஜக மறுக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு ரூ.1 கூட நிதி தரவில்லை" - ஆதாரத்தை வெளியிட்ட எம்.பி தயாநிதி மாறன்!

மேலும் சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் குற்றம் சாட்டி இருந்தனர். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு 2022-2023 மற்றும் 2023- 2024 ஆகிய நிதியாண்டுகளில் நிதி ஒதுக்கவில்லை என தனது கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளதாக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நாளைய தினம் தமிழக முதல்வர் டெல்லிக்கு புறப்பட உள்ளார். அப்போது பிரதமரிடம் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் அளிக்க உள்ளார். குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கும்படி மத்திய அரசிடம் தமிழக அரசின் சார்பில் பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டது குறித்து சுட்டிக்காட்ட உள்ளார். அதேபோல், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கான மத்திய அரசு பங்கு நிதி ஒதுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது குறித்தும் பிரதமரிடம் விவாதிக்க உள்ளார். தமிழகத்துக்கான வரி நிலுவைகள், கடந்த ஆண்டு தென்மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ளப்பாதிப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர் பிரதமரிடம் வலியுறுத்த உள்ளார்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.