காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பல ஊர்களில் இளம்பெண்களும், முதல்முறை வாக்காளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியசொங்கோடபள்ளம் அரசு பள்ளிக்கு 102 வயது அருக்கானி என்ற மூதாட்டி வாக்களிக்க வந்தார். இதனைக்கண்ட மற்ற வாக்காளர்களும், தேர்தல் அலுவலர்களும் நெகிழ்ச்சியடைந்தனர். இதுவரை மூதாட்டி அருக்காணி 17 நாடளுமன்றத் தேர்தகளிலும் வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.