ETV Bharat / state

ஈரோடு இடைத்தேர்தல்; பரபரத்த ஈபிஎஸ்.. சுறுசுறுப்பான அதிமுக நிர்வாகிகள்.. நடந்தது என்ன? - முன்னாள் கிழக்கு உறுப்பினராக இருந்த தென்னரசு

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணிக்குழு மற்றும் வார்டு கிளைக் கழக உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; இபிஎஸ் அதிமுக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை

author img

By

Published : Jan 27, 2023, 5:31 PM IST

ஈரோடு இடைத்தேர்தல்; பரபரத்த ஈபிஎஸ்.. சுறுசுறுப்பான அதிமுக நிர்வாகிகள்.. நடந்தது என்ன?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட ஐந்து நாட்களாக தேர்தல் பிரசாரத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவில் போட்டியிடப் போவது யார்? அல்லது அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியினருக்கு அந்த இடம் ஒதுக்கப்படுமா? என்று, எதிர்பார்த்து இருந்த நிலையில் அதிமுகவே நேரடியாக போட்டியிடுவது என முடிவாகியுள்ளது. அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்களைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக தலைமை 114 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அமைத்துள்ளது. மேலும், வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று(ஜன.27) இரண்டாவது நாளாக ஈரோடு செங்கோடம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வார்டு கிளைக் கழக உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம், ராஜேந்திரபாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், செல்லூர் ராஜு, எஸ்.பி. சண்முகநாதன், எம்.எஸ்.எம் ஆனந்தன், மாதவரம் மூர்த்தி மற்றும் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அவர்களை சந்தித்து இப்படி வாக்கு சேகரிப்பது தேர்தல் களப்பணிகள் எப்படி செய்வது என இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் வாழ்வு கிளைக் கழக பொறுப்பாளர்களிடம் கலந்து ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற அதிமுக வேட்பாளராக கே.வி. ராமலிங்கம் அல்லது முன்னாள் கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த தென்னரசு ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் பணிக்குழுவில் கே.வி. ராமலிங்கம் இடம் பெற்று இருப்பதால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற வேட்பாளராக மீண்டும் தென்னரசுக்கே இடம் கிடைக்கும் என அதிமுக வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கான புதிய வலைதளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.