ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதியில் பிரபல ஜவுளி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட, அந்த ஜவுளி நிறுவனத்திற்கு ஈரோட்டில் பல்வேறு கிளைகள் உள்ளன; ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தச்சூழ்நிலையில் அந்நிறுவனத்தின் உரிமையாளர் உமா சங்கர் என்பவருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் ஜவுளி நிறுவனத்தை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை வெளியேற்றியதுடன், அவர்களுக்குக் கரோனா தொற்று பரிசோதனை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சோதனை முடிவுகள் வந்தவுடன், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று குறைந்த ஆட்களைக் கொண்டு, நிறுவனம் செயல்பட மாநகராட்சி அலுவலர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரோட்டில் சரக்கு ரயிலை கவிழ்க்க சதி செய்த இருவர் கைது!