தமிழகத்தில் ஏப்ரல் 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, அந்தந்த மாவட்ட ஆட்சியர்தான் தேர்தல் அலுவலர் என்பதால் அவர்தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதேபோல் ஈரோடுமாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கதிரவன் தலைமையில் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான கருத்தரங்கைமாவட்ட ஆட்சியர்தொடங்கி வைத்தார். இந்த கருந்தரங்கில் ஆட்சியர் கதிரவன் பேசுகையில், “ஈரோடு மாவட்டத்தில் 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிவாக்காளர்கள் உள்ளனர். அதனால் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தலில், தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட PWD app என்ற ஆப்பில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் விவரங்களை பதிவு செய்தால், அவர்கள் வாக்களிக்க வாக்குசாவடியில் தேவையான வசதிகள் செய்து தரப்படும். இந்தாண்டு மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளிலிருந்து வாக்களிக்க வருவதற்கு வாகன வசதியும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.
ஈரோடு 16.03.2019
சதாசிவம்
இந்தாண்டு மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளிலிருந்து வாக்களிக்க வருவதற்கு வாகனவசதியும் செய்து தரப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்..
தமிழகத்தில் ஏப்ரல் 18 ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதே போல் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கதிரவன் தலைமையில் தேர்தல் தொடர்பான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.இன்று மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.ஈரோடு மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களிலிருத்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பயிற்றுநர் கலந்து கொண்டனர்.கருத்தரங்கில் ஈரோடு மாவட்டத்தில் 3 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தியுள்ளதாகவும் , இந்த கருந்தரங்கில் ஈரோடு மாவட்டத்தில் 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்த ஆட்சியர் வாக்களிப்பதின் அவசியத்தையும் , மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறப்பு ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்றும் , பேரணி நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட PWD app என்ற ஆப்பில் மாற்றுத்திறனாளிகள் தங்களின் விவரங்களை பதிவு செய்தால் , அவர்கள் வாக்களிக்க வாக்குசாவடியில் தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்றும் , இந்தாண்டு மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளிலிருந்து வாக்களிக்க வருவதற்கு வாகனவசதியும் செய்து தரப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.
Visual send mojo app
File name: TN_ERD_03_16_COLLECTOR_MEETING_VISUAL_7204339