ஈரோடு: மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுண்ணி, பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி முகாமை இன்று ஆய்வு செய்தார். முகாமில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு சமூக இடைவெளியுடன் இருக்கை வசதி அமைத்து தடுப்பூசி போட ஏற்பாடு செய்தார்.
ஆய்வின் போது பவானி வட்டார மருத்துவ அலுவலர் தனலட்சுமி, தாசில்தார் முத்துகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் லீனா சைமன், ஆய்வாளர் முனைவர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து பவானி அரசு மருத்துவமனை, சுற்றுவட்டாரப் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சஞ்ஜீப் பானர்ஜி ஆய்வு