தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு அடுத்துள்ள சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி. எனப்படும் சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று மாவட்டத் தலைமைத் தேர்தல் அலுவலர் கதிரவன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையம், கட்டுப்பாட்டு அறை ஊடக மையம் போன்றவற்றில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சோதனை மேற்கொண்டார்.