ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் 52 வாக்குப்பதிவு மையங்களும், 238 வாக்குச்சாவடிகளும் உள்ளன. அதில் 32 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்த கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், 45 மாற்று பாலினத்தவர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளனர். அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்களுடன் சேர்த்து மொத்தமாக 77 பேர் களத்தில் போட்டியிடுகின்றனர்.
இந்த இடைத்தேர்தலில் 1,430 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 286 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 310 சரிபார்ப்பு எந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களை, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் முன்பாக பொருத்தும் பணியானது, தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், மாவட்டம் தேர்தல் அலுவலர் கிருஷ்ணன்ண்ணி, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் இன்று (பிப். 18) காலை தொடங்கியது. சின்னங்களை பொருத்தும் பணியானது இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
இதையும் படிங்க:சித்தாள்களைப் போன்று வேலை செய்யும் பள்ளி மாணவர்கள்.. ஆசிரியர்களால் வெடித்த சர்ச்சை..