ஈரோட்டில் ஏழை, எளிய மக்களுக்கு அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் அம்மா உணவகத்தில் இன்று முதல் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மரப்பாலம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இதனை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், பன்னீர் செல்வம் பூங்கா, அரசு மருத்துவமனை, சின்ன காய்கறி மார்க்கெட், கொல்லம்பாளையம், பி.பி.அக்ரஹாரம், சூளை, மரப்பாலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இங்கு, இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், தயிர் சாதம், சப்பாத்தி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: அலைமோதும் கூட்டம்; அரவணைக்கும் அம்மா உணவகம்!