ஈரோடு : மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலை சாலை விக்னேஷ் நகர்ப் பகுதியில் வசித்து வருபவர் சேகர் இவர் திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று இருந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் உள்ளே புகுந்த இரண்டு நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 11- பவுன் தங்க நகை 1.30 லட்சம் ரொக்க பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதே போல அருகாமை வீட்டில் வசித்து வரும் துர்க்கை ராஜ் மீனாட்சி தம்பதியினர் வெளியூர் சென்று இருந்தனர் அவர்கள் வீட்டிலும் புகுந்த கொள்ளையர்கள் 10 பவுன் தங்க நகை 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
நள்ளிரவில் அதிக குடியிருப்புகள் இருக்கும் பகுதியைத் தேர்வு செய்து புகுந்த இரண்டு மர்ம நபர்கள் முகத்தை மறைத்தபடி ,யாரும் இல்லாத வீடுகளைத் தேர்வு செய்து உள்ளே புகுந்து கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து கொள்ளை சம்பவம் தொடர்பாகப் பெருந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
இதையும் படிங்க: கடன் தொல்லை - செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் கைது!
இந்நிலையில் பெருந்துறையிலிருந்து வெள்ளோடு செல்லும் சாலையில் வாகனத் தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு இருந்தபோது அவ்வழியாக வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்ததில் இவர்கள் பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோயில் பகுதியில் தொடர் திருட்டு மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டது காவல்துறையினருக்குத் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பெருந்துறை காவல்துறையினர், தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி துறை, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராமஜெயம், திருநெல்வேலியைச் சேர்ந்த கணேஷ் ,மற்றும் விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
இதில் விக்னேஷ் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஒரு கொள்ளை வழக்கில் தற்போது சிறையில் இருப்பதும் தெரிய வந்தது இவர்களிடம் இருந்து 23 பவுன் தங்க நகையை பெருந்துறை காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் இவர்கள் 5 ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க :Chandrayaan-3: விஞ்ஞான உலகில் விண் ஏறிச்செல்லும் இந்தியா: "சந்திராயன் 3" கவுன்டவுனுக்கு தயாராகும் இஸ்ரோ!