ஈரோடு: ஈரோடு மாநகராட்சி 27ஆவது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிடுபவர் பரமேஸ்வரி. இந்த வார்டில் பல ஆண்டுகளாக மருத்துவமனை, பள்ளிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகச் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இதே வார்டில் அரசு மதுபானக் கடையை மாவட்ட நிர்வாகம் கொண்டு வந்தது.
இதனால் அப்பகுதியில் குடிமகன்கள் குடித்து விட்டு தினமும் பிறந்த மேனியாக உருளுவதும், குடித்து விட்டு அப்பகுதியில் உள்ள பெண்களைக் கேலி கிண்டல் செய்வதும் போன்ற தொடர் நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. மேலும், சில சமூக விரோதிகள் மது அருந்தி கொலை கொள்ளை அடிதடி போன்ற பல குற்றச் சம்பவங்களும் நடந்துள்ளது.
இந்த தொடர், சம்பவத்தால் அப்பகுதியில் செயல்பட்ட பள்ளி மற்றும் மருத்துவமனைகள் நிரந்தரமாக மூடப்பட்டது. இந்த நிலையில், அப்பகுதியில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தற்போது தேமுதிக சார்பில் போட்டியிடும் பரமேஸ்வரி, பொதுமக்களைச் சந்தித்து தனது இறுதிக் கட்ட பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது. 'பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வரும் அரசு மதுபானக் கடையை, நான் வெற்றிப் பெற்று 100 நாள்களுக்குள் நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்பேன்' என்று கூறினார்.
மேலும், அப்படித் தவறும்பட்சத்தில் சட்டப்படி எனது மாநகராட்சி உறுப்பினர் பதவியை விட்டு விலகுவேன் எனக் கூறியும் ஒரு உறுதிமொழிப் பத்திரத்தை வாக்காளர்களுக்கு வழங்கி காலில் விழுந்தபடியும் பரப்புரை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: இறுதிக்கட்ட பரப்புரை: மநீம வேட்பாளர் சைக்கிளில் சென்று வாக்கு சேகரிப்பு