கரோனா நோய்த் தாக்கம் அதிகரித்து வந்ததன் எதிரொலியாக ஈரோடு கடைவீதி பகுதியில் அமைந்திருந்த நேதாஜி தினசரி காய்கறி சந்தையை பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.
கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதன் காரணமாக அனைத்துத் தொழில் நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டு திறக்க அனுமதியளித்து செயல்பட்டு வரும் நிலையில், ஜூன் 1ஆம் தேதியிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காய்கறிச் சந்தையை வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தினசரிச் சந்தைகளுக்கான முன்னேற்பாட்டு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பணியை முடித்து நாளை அல்லது நாளை மறுநாள் கடைகளை காய்கறி வியாபாரிகள் வசம் ஒப்படைத்து விட வேண்டும் என்று அலுவலர்களிடம் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கான வரப்பிரசாதங்கள் இந்த முகக் கவசங்கள்: திருப்பூர் தொழில்துறை