ஈரோடு மாவட்டம், பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை என 165 பயனாளிகளுக்கு 16 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கருப்பணன் பேசுகையில், ”ஈரோடு மாவட்டத்தில் எட்டு இடங்களில் சாய, சலவை ஆலைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பொது சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான ஆய்வுகள் உட்பட அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.
விரைவில் மத்திய அரசிடம் நிதி பெற்று பணிகள் தொடங்கப்படும். சிறப்பு வேளாண் பாதுகாப்பு மண்டலம் குறித்த அறிவிப்பு அனைத்து தரப்பினர் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், திமுக ஆட்சி காலத்தில் செய்யாததை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது. பாதுகாப்பு மண்டலம் குறித்து அரசாணை வெளிவரும் போது, எதிர்கட்சியினர் கருத்துகளுக்கு பதில் தெரியும்" என்றார்.
இதையும் படிங்க:'கொரோனா பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது' - சீனா