ETV Bharat / state

சாலையில் சுற்றித்திரியும் காட்டு யானை: வாகன ஓட்டிகள் பீதி!

author img

By

Published : Jan 5, 2020, 2:03 PM IST

ஈரோடு: திம்பம் சாலையில் காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

சாலையில் திருயும் யானைகள்
சாலையில் திருயும் யானைகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்து வனப்பகுதியின் நடுவே திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்தச் சாலை தமிழ்நாடு-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும்.

இந்த மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் பேருந்து, சரக்கு லாரி, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் நாள்தோறும் சென்றுவருகின்றன. இந்நிலையில், இந்த மலைப்பாதையில் வரக்கூடிய அதிக பாரமுள்ள கரும்பு லாரிகள், மலையின் மேல் ஏறுவதற்கு சிரமப்பட்டு கரும்புகளை அங்கேயே வீசி செல்கின்றனர்.

சாலையில் திரியும் யானைகள்

இதனையறிந்த காட்டு யானைகள் கரும்புகளைத் தேடி சாலைக்கு வருகிறது. இன்று காலை சாலையின் அருகே மூன்று யானைகள் கருபுகளைத் தேடிவந்து முகாமிட்டுள்ளது. மேலும், சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்தபடியே யானைகள் சாலையில் நின்றுள்ளது.

இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள், யானைகளின் அருகே வாகனத்தை நிறுத்த வேண்டாம், கவனத்துடன் வாகனத்தில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: சாலையில் நடந்துசென்ற யானைகளால் வாகன நெரிசல்

Intro:Body:tn_erd_01_sathy_timbam_elephant_move_vis_tn10009

திம்பம் சாலையில் நடமாடும் யானைகள்: இரவு நேரத்தில் சாலையில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

திம்பம் கொண்டை ஊசி வளைவுகளில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சடமைந்துள்ளனர்.

தமிழகம் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனத்தின் நடுவே திம்பம் மலைப்பாதை செல்கிறது. பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை இந்த தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் இருந்து வரும் கரும்புலாரிகள் அதிக பாரமுள்ள கரும்புகளை திம்பம் சாலையில் வீசுவதால் திம்பம் மலைப்பாதையில் யானைகள் முகாமிட்டுள்ளன. இன்று திம்பம் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவு அருகே 3 யானைகள் முகாமிட்டு அங்கும் இங்குமாக திரிகின்றன. ஒரு யானை மலைப்பாதையை ஒட்டியுள்ள தடுப்புச் சுவரை ஒட்டி நின்றபடி கரும்பை தேடுவதோடு மலைப்பாதையில் பயணிக்கும் வாகனங்களை பார்த்தபடி வெகுநேரம் நின்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் மலைப்பாதையில் வாகனத்தை இயக்கினர். தகவலறிந்த வனத்துறையினர் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் யானைகளின் அருகே வாகனத்தை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.