ETV Bharat / state

யானை தாக்கி இளைஞர் பலி! - eroad

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

யானை தாக்கியதில் வாலிபர் பலி-மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி படுகாயம்!
author img

By

Published : Aug 6, 2019, 1:18 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனச்சரகத்தில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் தினமும் இரவில் வனத்தைவிட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளைபொருட்களை சேதப்படுத்திவருகிறது.

இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் அருகேயுள்ள நால்ரோடு கிராமத்தின் சாலையோர வனப்பகுதியில் கிராம மக்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த யானை ஒன்று அவர்களை தாக்க ஆரம்பித்தது.

அப்போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தாக்கப்பட்டு யானையின் தும்பிக்கையால் தூக்கி வீசப்பட்டார். இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அப்பெண்ணை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் யானை மூதாட்டியின் அருகேயே நின்று கொண்டிருந்ததால் அதனருகில் செல்ல இயலவில்லை. பின்னர் திரும்பி வேகமாய் வந்த யானை நால்ரோடு கிராமத்தைச் சேர்ந்த குமார் (29) என்பவரை பலமாக தாக்கியது.

பின்பு தகவலறிந்து அங்கு சென்ற விளாமுண்டி வனத் துறையினர் யானையை காட்டிற்குள் விரட்டியடித்தனர். பின்பு காயமடைந்த இருவரையும் மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் குமார் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இறந்த குமாரின் உறவினர்கள், நால்ரோடு கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள், யானைகள் வனத்தைவிட்டு வெளியேறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சத்தியங்கலம்-மேட்டுப்பாளையம்-பவானிசாகர்-புஞ்சைபுளியம்பட்டி இணைப்புச்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

யானைகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க கோரி சாலைமறியலில் ஈடுபட்ட பொது மக்கள்

தகவலறிந்த பவானிசாகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உயர் அலுவலர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து 2 மணி நேரமாக நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.

Intro:Body:tn_erd_02_sathy_salaimarial_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே சாலையில் நடந்து சென்றவர்களை ஒற்றை யானை தாக்கியதில் வாலிபர் பலி.

யானையை வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம் அருகே சாலையில் நடந்து சென்றவர்களை ஒற்றை யானை துரத்தி தாக்கியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனச்சரகத்தில் 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் தினமும் இரவில் வனத்தை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விளைபொருட்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்நிலையில் பவானிசாகர் - புஞ்சைபுளியம்பட்டி சாலையில் நால்ரோடு கிராமம் அருகே சாலையோர வனப்பகுதியில் ஒற்றை யானை நின்றுகொண்டிருந்தது. அப்போது சுமார் 55 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாலையில் நடந்து சென்றபோது ஒற்றை யானை அப்பெண்ணை தாக்கி தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அப்பெண்ணை காப்பாற்ற முயன்றனர். யானை பெண்ணின் அருகே நின்றுகொண்டிருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அப்போது ஒற்றை யானை திடீரென பொதுமக்களை துரத்தியதில் அப்பகுதியில் நின்றிருந்த நால்ரோடு கிராமத்தை சேர்ந்த வாலிபர் குமார் (வயது 29) என்பவரை தும்பிக்கையால் கீழே தள்ளி காலால் மிதித்ததில் முகத்தில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த விளாமுண்டி வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் நின்றிருந்த ஒற்றையானையை விரட்டியடித்துவிட்டு யானை தாக்கி காயமடைந்த இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதுலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் இறந்த குமாரின் உறவினர்கள் மற்றும் நால்ரோடு பகுதியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் யானை வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க கோரி நால்ரோடு பகுதியில் சத்தியங்கலம் - மேட்டுப்பாளையம் - பவானிசாகர் - புஞ்சைபுளியம்பட்டி இணைப்புச்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து 2 மணி நேரமாக நடந்த போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.