ETV Bharat / state

குன்றி மலைப் பகுதியில் வாகனத்தைத் துரத்திய காட்டுயானை! - elephant chasing vehicle

ஈரோடு: குன்றி மலைப்பகுதியில் காரில் சென்றவர்களை காட்டு யானை துரத்தியது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குன்றி மலைப் பகுதியில் வாகனத்தைத் துரத்திய காட்டுயானை!

author img

By

Published : Aug 17, 2020, 10:10 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியே கடம்பூரைச் சேர்ந்த 4 பேர் காரில் குன்றி மலைப்பகுதிக்கு சென்றனர். குன்றியில் இருந்து 10 கிமீ தூரத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த ஒற்றையானை காரைப் பார்த்தும் அதே இடத்தில் நின்றது.

யானை நகர்ந்த பின்னர் அப்பகுதி வழியாகச் செல்லலாம் என காரில் வந்தவர்கள் ஒதுங்கி வாகனத்தை இயக்காமல் காத்திருந்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அந்த யானை மெதுவாக நகர்ந்து முன்னோக்கி வந்தது.

இதைக் கண்ட இளைஞர்கள் தங்களது காரை வேகமாக பின்னோக்கி ஓட்டி அங்கிருந்து தப்பினர். மேலும், மேற்கொண்டு அவ்வழியாகச் செல்ல இளைஞர்கள் அஞ்சினர்.

குன்றி மலைப் பகுதியில் வாகனத்தைத் துரத்திய காட்டுயானை!

பின்னர், அங்கு வந்த வனத்துறையினர் யானையை காட்டுக்குள் விரட்டினர். யானைகள் அடிக்கடி சாலையை கடப்பதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க:முதுமலையில் 27 வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.