ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் யானைகள் உள்ளன. அதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் இருக்கும்.
அவ்வாறு சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் சோதனைச் சாவடி பகுதியில் இரண்டு காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த நிலையில் அதில் ஓர் யானை, காய்கறி மூட்டைகளை ஏற்றிவந்திருந்த லாரியை முற்றுகையிட்டது.
அத்துடன் லாரியில் இருக்கும் காய்கறி மூட்டைகளை கீழே தள்ள முயற்சித்துள்ளது. அதனால் சக லாரி ஓட்டுநர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு - மூன்று பேர் கைது