ETV Bharat / state

மின்வாரிய கணக்கீட்டாளர் கிணற்றில் சடலமாக மீட்பு - கிணற்றில் தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலி!

மனைவியைப் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த சத்தியமங்கலம் மின் வாரிய கணக்கீட்டாளர், தோட்டத்துக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

manikandan
manikandan
author img

By

Published : Jun 14, 2021, 7:44 AM IST

ஈரோடு: அந்தியூர் தாலுகா கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சத்தியமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக கணக்கீட்டாளர் ஆகப் பணிபுரிந்து வந்தார்.

விவசாயத்தில் ஆர்வமுடைய இவர் தனது தோட்டத்துப் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச நேற்று முன்தினம்(ஜுன்.12) சென்றிருந்தார். வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குடும்பத்தினர் தேடியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று(ஜுன்.13) மாலை தோட்டத்துக் கிணற்றில் மணிகண்டனின் சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

manikandan
மின்வாரிய கணக்கீட்டாளர் கிணற்றில் சடலமாக மீட்பு

உடனடியாக அப்பகுதி மக்கள் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், உயிரிழந்த மணிகண்டன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியைப் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். மனைவியின் பிரிவைத் தாங்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணமானதை மறைத்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டு பணம் பறித்த பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.