ஈரோடு: பெருந்துறை பகுதியில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் மின்கம்பங்களில் பணிகள் நடைபெற்றன. அப்போது, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மின் வாரிய ஊழியர் சிவசங்கரன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலுள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின் இணைப்புகளை கொடுப்பதற்கான பணிகளை செய்துகொண்டிருந்தார்.
அப்போது, தீடிரென மின்சாரம் தாக்கியதில் டிரான்ஸ்பார்மிலேயே உடல் கருகி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், உயிரிழந்த சிவசங்கரனின் உடலை கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய ஊழியர் டிரான்ஸ்பார்மரில் உடல் கருகி பற்றி எரியும் காட்சிகள் அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போன் மூலமாக வீடியோ பதிவு செய்துள்ளனர். அந்த பதை பதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த நபரிடம் கத்திமுனையில் ரூ.5 லட்சம் வழிப்பறி