நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வருவாய் துறையினர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைகாரன் கோயில் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் வாக்கு பதிவு இயந்திரம் செயல்படும் முறைகள் குறித்து எடுத்துரைத்து வாக்கு இயந்திரத்தில் வாக்களிப்பது எவ்வாறு என்றும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
மேலும் 100 சதவிகிதம் வாக்குபதிவு செய்யவேண்டும் எனவும், வாக்குப் பதிவு நாள் அன்று அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.