ETV Bharat / state

உதவித்தொகை வழங்கக்கோரி முதியோர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு: உதவித்தொகை வழங்கக்கோரி சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் முதியோர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதியோர்கள் காத்திருப்பு போராட்டம்
author img

By

Published : Jul 9, 2019, 1:24 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, கடம்பூர் பகுதிகளைச் சேர்ந்த முதியோர்கள், உதவித்தொகை கேட்டு கடந்த ஆண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். இதில் 213 பேர் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் ஓராண்டாகியும் இதுவரை உதவித்தொகை வழங்கப்படவில்லை

உதவித்தொகை வழங்கக்கோரி முதியோர்கள் காத்திருப்பு போராட்டம்
இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் பலமுறை புகாரளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். இந்நிலையில், உதவி தொகை வழங்கக்கோரி 300 க்கும் மேற்பட்ட முதியோர்கள் சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடம் சென்ற சத்தியமங்கலம் வருவாய்த்துறை அலுவலர்கள், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு நிதி ஒதுக்கப்படாததால் உதவித்தொகை வழங்க இயலவில்லை எனவே உயர்திகாரிகளிடம் பேசி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Intro:Body:tn_erd_01_sathy_oap_pension_vis_tn10009

முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி 300 க்கும் மேற்பட்ட முதியவர்கள் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சத்தியமங்கலம், ஜூலை.9. முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி 300 க்கும் மேற்பட்ட முதியவர்கள் தாலுக்கா அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் தாலுகாவிற்குட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, கடம்பூர்  பகுதிகளை சேர்ந்த வயதான முதியவர்கள் மற்றும் முதாட்டிகள் முதியோர் உதவித்தொகை கேட்டு கடந்த ஆண்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தனர். இதில் உதவித்தொகை பெற தகுதியுள்ள 213 பேர் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிலையில் ஓராண்டாகியும் இதுவரை 213 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் 300 க்கும் மேற்பட்ட முதியோர்கள் நேற்று மதியம் சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகத்திற்கு சென்று தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 213 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கக்கோரி அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சத்தியமங்கலம் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கப்படாததால் உதவித்தொகை வழகப்படவில்லை எனவும் உயரதிகாரிகளிடம் பேசி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 3 மணிக்கு கைவிடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.   முதியோர் உதவித்தொகை கேட்டு முதியவர்கள் தாலுக்கா  அலுவலகத்தில் 3 மணி நேரம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Conclusion:tn_erd_01_sathy_oap_pension_vis_tn10009
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.