ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த விண்ணப்பள்ளி தனியார் பொறியியல் டிப்ளமோ பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழாவில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், “இந்தியாவில் 80 லட்சம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை, ஆனால் டிப்ளமோ படித்த அனைவருக்கும் வேலை உண்டு. சென்னையில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனத்தில் பாலிடெக்னிக் டிப்ளமோ படித்தவர்களே அதிகம் உள்ளனர்.
ஐடிஐ படித்தவர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு உண்டு. வருங்காலத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புள்ள படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படித்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுகிறேன்” என்றார். மேலும், பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: 'அங்கீகாரம் என்பது உழைப்பால் மட்டுமே கிடைக்கும்' : அமைச்சர் ஜெயக்குமார்