கரோனா வைரஸ் தொற்று இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கரோனாவின் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், மார்ச் 31ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. தமிழ்நாடு அரசும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததுடன் மக்கள் அதிகம் கூடும் இடங்களையும் மூட உத்தரவிட்டது.
இச்சூழலில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனின் வீட்டின் முகப்பு வாயிலில் அறிவிப்புப் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
அதில், ”முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மார்ச்31ஆம் தேதி வரை அமைச்சர் செங்கோட்டையனை கோபிசெட்டிபாளையத்திலும் சென்னையிலும் சந்திக்க வருவதைத் தவிர்த்து பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அமைச்சரைச் சந்திக்க வருபவர்கள் இந்தப் பலகையைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: 950 கோடியில் 4,865 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன - முதலமைச்சர் பழனிசாமி