ETV Bharat / state

'டீசலுக்கு காசு இல்லைங்க' - திருடிய வாகனத்தை நடுரோட்டில் விட்டுச்சென்ற திருடர்கள்

ஈரோடு: திருடிய வாகனத்தில் டீசல் தீர்ந்த காரணத்தினால், அவ்வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு திருடிய நபர்கள் தப்பியோடிய சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு
ஈரோடு
author img

By

Published : Jan 22, 2020, 8:56 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வசித்துவருபவர் ரவி(48). இவர் சொந்தமாக மினிலாரி வைத்து வாடகைக்கு ஓட்டிவருகிறார். இவர் வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரத்துக்குப் பிறகு ரவி வெளியே வந்து பார்தத்போது, தனது வாகனம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினரிடம் ரவி புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், தீவிரமாக வாகனத்தை தேடிவந்தனர்.

இந்நிலையில், புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த ஒருவர், ரவியின் வாகனம் கோவை இடுகம்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருப்பதாக அவருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சோதனை செய்ததில் வாகனத்தை திருடிச்சென்ற நபர்கள் டீசல் இல்லாததால் சாலையோரத்தில் நிறுத்திச்சென்றது தெரிய வந்தது. பின்னர், வாகனத்தை மீட்ட காவல் துறையினர், அதை ரவியிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: கோவையில் பெண்கள் உள்ளாடைகளைத் திருடும் சைக்கோ திருடன்!

Intro:Body:tn_erd_04_sathy_theft_van_vis_tn10009

டீசல் தீர்ந்ததால் திருடிய வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற திருடர்கள்

சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஜவகர் மெயின் ரோடு அரசு தொடக்கப்ள்ளி எதிரில் வசித்து வருபவர் ரவி(48). இவர் சொந்தமாக மினிலாரி வைத்து வாடகைக்கு இயக்கி வந்தார். இவர் வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரத்துக்கு பிறகு வந்த பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட வாகனம் காணாமல் போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வாகனத்தை தேடிவந்தனர். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர் புஞ்சைபுளியம்பட்டியில் காணாமல் போன வாகனம் கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்துள்ள இடுகம்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்ததை கண்டு ரவிக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது மினிலாரியில் டீசல் தீர்ந்த நிலையில் நின்றதை அறிந்தனர். வாகனத்தை திருடிச்சென்ற திருடர்கள் டீசல் சாலையோரத்தில் நிறுத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து வாகனத்தை மீட்டு ரவியிடம் ஒப்படைத்தனர்
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.