ETV Bharat / state

வறட்சியால் குடிநீர் தேடி அலையும் யானை - ஈரோடு சுற்றித்திரியும் யானை

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் ஆண் யானை ஒன்று தீவனம், குடிநீர் தேடி சத்தியமங்லம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வனப்பகுதியில் சுற்றித்திரிகிறது.

drought-in-sathyamangalam-wildlife-sanctuary-leaves-an-elephant-to-fetch-food-and-water
வறட்சியால் உணவு குடிநீர் தேடி அலையும் யானை
author img

By

Published : Mar 17, 2020, 1:03 PM IST

தமிழ்நாட்டில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அதிக பரப்பளவு கொண்டதாகும். இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக வனப்பகுதியில் மழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள மரம், செடிகொடிகள் காய்ந்துவிட்டன.

இதன் காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு கடுமையான தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, தடுப்பணைகளில் தண்ணீர் வற்றியதால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்தியமங்லம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆசனூரில் ஆண் யானை ஒன்று தீவனம், குடிநீர் தேடி சாலையோர வனப்பகுதியில் சுற்றித்திரிகிறது.

ஓரளவு பச்சை இலைகள் உள்ள மரங்களை தேடும் இந்த யானை அந்த இலைகளை பறித்து உண்டபடி சுற்றித்திரிவதோடு அவ்வப்போது சாலையில் நடமாடுகிறது. வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள் அமைத்து நீர் நிரப்ப வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வறட்சியால் உணவு குடிநீர் தேடி அலையும் யானை

இதையும் படிங்க: தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த யானை மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.