தாளவாடி, ஆசனூர், கடம்பூர் மலைப்பகுதியில் அமைந்துள்ள 16 வாக்குச்சாவடிகளில் தொலைத்தொடர்பு வசதி கிடையாது. அடர்ந்த வனப்பகுதியிலுள்ள வாக்குச்சாவடிகளில் நேற்று (மார்ச். 5) ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் ஆய்வு மேற்கொண்டார்.
காளிதிம்பம், பெஜலட்டி, கோட்டாடை, மாவள்ளம், கெத்தேசால் உள்ளிட்ட மலை கிராமங்களில் ஆய்வுமேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் வாக்குச்சாவடிகள் அமைக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இப்பகுதி அலைபேசி கோபுர வசதியற்றவை என்பதால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விழுக்காடு குறித்த தகவலை வனத் துறையினரின் வயர்லெஸ் தொலைத்தொடர்பற்ற கருவிகளைப் பயன்படுத்தி தகவல் தெரிவிக்குமாறு கூறினார்.
ஆய்வின்போது சத்தியமங்கலம், தாளவாடி தாலுகாக்களைச் சேர்ந்த தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க : ஓபிஎஸ்-இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்