ETV Bharat / state

உணவு வழங்க வேண்டாம்: விழிப்புணர்வு பலகை வைத்தும் பலனில்லை!

ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் லங்கூர் இனக்குரங்குகளுக்கு தின்பண்டங்களை கொடுக்க வேண்டாம் என்று வனத் துறையினர் அறிவித்தும் எவ்வித பலனும் இல்லை, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

monkeys
author img

By

Published : Jul 12, 2019, 7:26 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் 10 முதல் 27ஆவது வளைவு வரை லங்கூர் இன குரங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், மனிதர்களைக் கண்டாலே தாவி ஓடும் லங்கூர் இன குரங்குகள், வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி தின்பண்டங்கள் வழங்கும்போது கார் உள்ளிட்ட வாகனங்களின் கதவு வழியாக உள்ளே நுழைய முயற்சிக்கின்றன.

விழிப்புணர்வு பலகை வைத்தும் பலனில்லை!

வனத் துறையினரும் குரங்களுக்கு உணவு, தின்பண்டங்களை வழங்கக் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்துவதோடு, பல இடங்களில் விழிப்புணர்வு பலகைகள் வைத்தும் பலனில்லை. இது குறித்து வனத் துறை அலுவலரிடம் கேட்டபோது, திம்பம் மலைப்பாதையில் குரங்குகளுக்கு தின்பண்டங்கள் வழங்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Intro:திம்பம் மலைப்பாதையில் லங்கூர் இன குரங்குகளுக்கு திண்பண்டங்கள் கொடுக்கும் வாகன ஓட்டிகள். குரங்குகள் வாகனத்தின் கதவு வழியாக உள்ளே நுழைந்து திண்பண்டங்களை பறிக்கும் காட்சிBody:tn_erd_01_sathy_monkey_food_feed_vis_tn10009

திம்பம் மலைப்பாதையில் லங்கூர் இன குரங்குகளுக்கு திண்பண்டங்கள் கொடுக்கும் வாகன ஓட்டிகள். குரங்குகள் வாகனத்தின் கதவு வழியாக உள்ளே நுழைந்து தின்பண்டங்களை பறிக்கும் காட்சி

திம்பம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் லங்கூர் இன குரங்குகளுக்கு திண்பண்டங்கள் கொடுப்பதால் குரங்குகள் வாகனத்தில் அடிபட்டு இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் இம்மலைப்பாதை வழியாக 24 மணி நேரமும் வாகனப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. திம்பம் வனப்பகுதியில் லங்கூர் இன குரங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக திம்பம் மலைப்பாதையில் 10 வது கொண்டை ஊசி வளைவு முதல் 27 வது கொண்டை ஊசி வளைவு வரை உள்ள வனப்பகுதியில் இந்த குரங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த வகை குரங்குகள் மனிதர்களை கண்டால் உடனடியாக தாவிக்குதித்து ஓடி மரத்தின் உச்சிக்கு சென்று அமர்ந்துகொள்ளும் குணமுடையது. இந்நிலையில் மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பழங்கள், முறுக்கு உள்ளிட்ட திண்பண்டங்களை மலைப்பாதை ஓரத்தில் அமர்ந்துள்ள சாதாரண வகை குரங்குகளுக்கு கொடுத்துவிட்டு செல்வர். குரங்குகள் திண்பண்டங்களை தின்று பழகியதால் வனப்பகுதிக்குள் சென்று உணவு தேடாமல் வாகன ஓட்டிகள் யாராவது திண்பண்டங்கள் தருவார்களா என எதிர்ப்பார்ப்புடன் காத்திருப்பதோடு சாலைகளில் நடமாடும்போது வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், காயம்படுவதும் தொடர்கதையாக உள்ளது. லங்கூர் இன குரங்குகள் வாகன ஓட்டிகள் தரும் திண்பண்டங்களுக்காக காத்திருக்காமல் வனப்பகுதிக்குள் சென்று உணவு தேடி உட்கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த வகை குரங்குகளும் வாகன ஓட்டிகள் தரும் திண்பண்டங்களை உண்டு பழகியதோடு வாகனங்களை நிறுத்தி திண்டங்கள் வழங்கும்போது கார் உள்ளிட்ட வாகனங்களில் குரங்குகள் ஏறி உள்ளே நுழைய முயற்சிக்கின்றன. அப்போது லங்கூர் இன குரங்குகளும் வாகனத்தில் சிக்கி இறக்கும் அபாயம் உள்ளது. வனத்துறையினரும் குரங்குகளுக்கு உணவு மற்றும் தின்பண்டங்களை அளிக்ககூடாது என வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்துவதோடு பல இடங்களில் விழிப்புணர்வு போர்டுகள் வைத்தும் பயனில்லை. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது திம்பம் மலைப்பாதையில் குரங்குகளுக்கு திண்பண்டங்கள் வழங்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.