ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுபபினர் கே.ஆர்.ராதாகிருஷ்ண்ன். இவர் வருமானத்துக்கு அதிகமாக 100 கோடி மதிப்பில் சொத்து சேர்ந்துள்ளதாகவும் மனைவி தந்தை பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதகாவும் திமுக சட்டப்பிரிவு புகார் தெரிவித்துள்ளது.
சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவுக்கு அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர். கவுந்தப்பாடியில் சட்டப்பிரிவு வழக்குரைஞர் ஆர்.ராஜா, மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவன் ஆகியோர் ஆவணங்களை செய்தியாளர்களிடம் முன்பு காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 'ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு; கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவு ட்வீட்' - நீதிமன்றத்திற்குச் செல்லும் திமுக