ஈரோடு மாநகர திமுக சார்பில் கருங்கல்பாளையம் காந்தி சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளைச் சீரமைக்க வேண்டும், டெங்கு காய்ச்சலைக் கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வேண்டும், பாதுகாப்பற்ற முறையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: