ஈரோடு: நசியனூர் அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அர்ஜூனன் என்பவர் உணவகத்தை நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகிலேயே நசியனூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் கோவேந்திரனும் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்குமிடையே தொழில்போட்டி இருந்து வந்துள்ளது.
தொழில்போட்டி காரணமாக திமுக கவுன்சிலர் கோவேந்திரன் அர்ஜூனனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் மதுபோதையில் அர்ஜூனன் கடைக்கு வந்த கோவேந்திரன் கடையை அடித்து உடைத்தது மட்டுமின்றி, கடையின் மீது பெட்ரோல் குண்டும் வீசி சென்றார்.
இதனால் கடையில் இருந்த இரண்டு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து கருகி நாசமாகின. இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. தொழில் போட்டி காரணமாக திமுக கவுன்சிலர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Thanjavur: காரில் கஞ்சா கடத்திய தீயணைப்பு வீரர் கைது!