ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பங்களாபுதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அரசின் விலையில்லா புத்தகப்பைகள் ஹரியானா மாநிலத்தில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் இப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில் புத்தகப்பைகளை பள்ளியில் இறக்குவதற்கு நின்றிருந்த லாரியை திமுகவினர் பார்த்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய பைகளை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அரசிடம் தேர்தல் அலுவலர்கள் கேட்டனர். அதற்கு பிப்ரவரி 23ஆம் தேதி வரவேண்டிய லாரி, வரும் வழியில் ஏற்பட்ட காலதாமதத்தால், தற்போது வந்துள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் புத்தகப் பைகளை இறக்கி வைத்த தேர்தல் அலுவலர்கள், அதற்கு சீல் வைத்தனர். இதையடுத்து அங்கிருந்து திமுகவினர் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் கண்காணிப்பு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்!