தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்கு இறுதிநாள் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது சொந்தத் தொகுதியில் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் அமமுக வேட்பாளர் துளசிமணி தனது ஆதரவாளர்களுடன் கோபிசெட்டிபாளையம் தினசரி காய்கறி சந்தையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த காய்கறி வியபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.
அதேபோல் திமுக சார்பில் பேட்டியிடும் மணிமாறன் அதிகாலை முதல் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் வீடு வீடாகவும், வீதி வீதியாகவும் சென்று வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள் செல்லும் இடங்களில் ஆதராவாளர்கள் ஆரத்தி எடுத்தும், மலர் கொத்துக்கள் கொடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
திமுக வேட்பாளர் மணிமாறன் கோபிசெட்டிபாளையம் யாகூப் வீதிக்கு வாக்கு சேகரிக்க வந்தபோது அங்கிருந்த தொண்டர்கள் பறக்கும் பலூன்களை வைத்து வரவேற்றனர்.
இதையும் படிங்க: பெருங்குறையுடன் தேர்தலை புறக்கணிக்கும் குருங்குளம்