கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கரும்பு ஏற்றி வந்த லாரி திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. திம்பம் 3ஆவது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும் போது, அதிக பாரம் காரணமாக சாலையோரம் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
அப்போது லாரி ஓட்டுநர் குமாரசாமி லாரியில் இருந்து குதித்து தப்பினார். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் லேசான காயத்துடன் ஓட்டுநரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே லாரியில் இருந்து கீழே சிதறிய கரும்புகளை தின்பதற்காக யானைகள் வந்ததால் உடனடியாக கரும்புகளை அப்புறப்படுத்த இயலவில்லை. அரை மணி நேரத்திற்குப் பிறகு லாரியில் இருந்து கரும்புகளை மற்றொரு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். லாரி கவிழ்ந்த விபத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இதையும் படிக்க: காங்கேயம் மாட்டு பால் பண்ணை அமைக்க கோரிக்கை!