ஈரோடு: தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அதிகாலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. இதனால் அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினர்.
கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு, தடுப்பு அமைத்து நீண்ட வரிசை ஏற்படுத்தப்பட்டது. மேலும் முகக்கசவம், தகுந்த இடைவெளி, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்ற அரசின் நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் பிரகாரத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆடிவெள்ளியையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் தீபமேற்றியும் காணிக்கையாக உப்பு செலுத்தியும் வழிபட்டனர். தேங்காய், பூமலை போன்ற பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு கரானா அச்சுறுத்தல் காரணமாக கோயில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு கோயிலில் ஆடிவெள்ளி பூஜை நடைபெறுவதால் பெண்கள் அதிகளவில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ஆடி பௌர்ணமி- வழிபாடும் மகிமையும்!