ஈரோடு மாவட்டம் அருகேயுள்ள பி.பி.அக்ரஹாரம் உள்ளிட்ட காலிங்கராயன் கால்வாய் கரையோர கிராம பகுதிகளில் 450 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி அறுவடைக்குத் தயாராகவுள்ளது. இந்நிலையில் புயல் மீண்டும் வருமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே நெற்பயிர்கள் சேதமடையாமல் தடுத்திட நெல் கொள்முதல் மையத்தை அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், "அணை நாசுவம்பாளையம், பி.பி.அக்ரஹாரம், நஞ்சை தளவாய்ப்பாளையம், வைராபாளையம், சூரியம்பாளையம் உள்ளிட்ட காலிங்கராயன் கால்வாய் கரையோர கிராமங்களில் 450 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து மழையும், புயல் பாதிப்புள்ளதாக எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டு வருவதால் அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்பயிர்கள் முற்றிலும் வீணாகிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே அக்ரஹாரம் பகுதியில் நெல் கொள்முதல் மையத்தை அமைத்திட வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருச்சியில் விவசாயிகள் பேப்பர் ராக்கெட் விடும் நூதன போராட்டம்!