சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காடக நல்லி வனப்பகுதியில் செந்நாய்கள் வேகமாய் பயந்து ஓடுவதைக் கண்டு வனத்துறையினர் சென்று பார்த்தனர்.அங்கு மானைக் தின்று கொண்டிருந்த செந்நாய்களை விரட்டிவிட்டு 8 பேர் கொண்ட கும்பல் மான் கறியைக் கடத்திக் கொண்டிருந்தனர்
இதனைப் பார்த்த வனத்துறையினர் உடனடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.பின்னர் மேற்கொண்ட விசாரணையில் அந்த அடையாளம் தெரியாத நபர்கள் அனைவரும் காடக நல்லியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லால் முன்னிலையில் முன்னிறுத்தினர்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த அருண்லால் மான் கறி கடத்திய 8 பேருக்கும் வன குற்றவியல் சட்டப்படி தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பின்னர் அபராத தொகையை 8 பேரும் செலுத்தியதால் விடுதலைச் செய்யப்பட்டனர்.