ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தையில், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாட்டு சந்தை கூடுவது வழக்கம்.
இன்று கூடிய சந்தைக்கு நேற்றிரவு முதலே ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும் மாடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.
மாடுகளை வாங்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனா்.
![கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/vlcsnap-2020-11-05-10h18m32s971_0511newsroom_1604551774_943.png)
இந்த வாரம் கூடிய சந்தையில் பசு - 400, எருமை - 150, கன்று - 100 என 650 மாடுகள் வரத்தானது. இதில், அதிக கறவை மாடுகள் ரூ. 30ஆயிரம் முதல் ரூ.70ஆயிரம் வரையும், கன்று ரூ. 9ஆயிரம் முதல் ரூ.15ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டன.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், பணம் தேவை அதிகரிக்கும் என்பதால் அதிகளவில் மாடுகள் வரத்தாகி உள்ளது. வரத்தான மாடுகள் 80 சதவீதம் விற்பனையாகியது. அடுத்த வாரம் கூடும் சந்தையில் இதேபோல் மாடுகள் அதிகளவில் வரத்தாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.