ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி தனியார் நூற்பாலையில் கடலூர் மாவட்டம், மூலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா(21) என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். அங்கு அதே ஊரைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் விஷ்வாவிற்கு சிறுமியின் மீது ஒரு தலை காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி விஷ்வா, அவரை கடத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் புன்செய் புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து சிறுமியை மீட்ட காவல் துறையினர், விஷ்வாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து கோபி சிறையில் அடைத்தனர்.