ETV Bharat / state

60 அடி ஆழம்... 2 மணி நேரம்: கிணற்றில் விழுந்த கருவுற்ற பசு உயிருடன் மீட்பு!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறிவிழுந்த 8 மாத கருவுற்ற பசுவை 2 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த கர்ப்பிணி மாடு: 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!
Cow fell down into well
author img

By

Published : Sep 11, 2020, 6:31 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் ஜெயராமன் என்ற விவசாயி, தனது வாழைத் தோட்டத்தில் அவரது எட்டு மாத கருவுற்ற பசுவை மேய்ச்சலுக்காக அவிழ்ந்து விட்டுவிட்டு தோட்ட வேலையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் கால் தவறி விழுந்துள்ளது. சத்தம் கேட்டு ஓடிச்சென்று ஜெயராமன் அதிர்ச்சியடைந்து சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் விரைந்துவந்தனர்.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றினுள் இறங்கி கயிறுமூலம் கருவுற்ற பசுவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணிநேரமாக நடந்த போராட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் பசுவை உயிருடன் மீட்டனர்.

கிணற்றில் இரண்டடி மட்டுமே தண்ணீர் இருந்ததால் பசு சிறிய காயங்களுடன் உயிர்பிழைத்தது. கருவுற்ற பசுவை மீட்ட கோபிசெட்டிபாளையம் தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.