ஈரோடு : தாளவாடி அருகே நாட்டுவெடிகுண்டு கடித்து பசு மாடு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாளவாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவப்பா (60) விவசாயி. இவர் தோட்டத்தில் ஆடு, மாடுகள் பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் வனத்தையொட்டியுள்ள தனது மானாவாரி நிலத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது புற்களை மேய்ந்து கொண்டிருந்த போது கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை பசுமாடு கடித்தது. அப்போது, நாட்டு வெடிகுண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது.
இதில் பசு மாட்டின் வாய்ப்பகுதி சேதமடைந்து உயிருக்கு போராடியது. வாய்ப்பகுதி சிதைந்ததால் அதனால் சாப்பிட முடியால் உயிரிழந்தது. கடந்த 2 மாதம் முன்பு அருள்வாடி கிராமத்தில் நாட்டு வெடியை கடித்து 2 மாடுகள் இறந்தன.
தற்போது மீண்டும் நாட்டு வெடியை கடித்து பசு மாடு இறந்துள்ளதால் நாட்டு வெடிகுண்டு வைக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்துக்கு வந்த வனத்துறையினர் நாட்டு வெடிக்குண்டுகள் மேலும் வனத்தில் வீசப்பட்டுள்ளதா என விசாரித்து வருகின்றனர்.
காட்டுப் பன்றிகளை வேட்டையாட நாட்டுவெடி குண்டு வைத்து வேட்டையாடிவருவதாகவும் அதை மாடுகள் கடித்து தொடர்ந்து உயிரிழந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மனிதர்கள் இதில் சிக்கி விபரீதம் நடப்பதற்கு முன்பாக நாட்டு வெடி பயன்படுத்தும் சமூக விரோதிகளை கைது செய்ய காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க : யூ-ட்யூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 சிறுவர்கள்