ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பாக சிறுமியின் தாயார், தாயாரின் இரண்டாவது கணவர், புரோக்கர் மற்றும் ஆதார் கார்டு திருத்தம் செய்து கொடுத்தவர் உள்ளிட்ட 4 பேரை ஈரோடு தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பாக ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இடைத்தரகராக செயல்பட்டவரின் வங்கிக்கணக்கில் பல்வேறு தேதிகளில் பணம் வரவு வைக்கப்பட்டு இருப்பதைக் கண்ட காவல்துறையினர், 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு ஈரோடு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று (ஜூன்).16 விசாரித்த நீதிபதி, ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
![16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் - இடைத்தரகரை காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி..](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15581569_e.jpg)
இதையும் படிங்க: சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கு - பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை!